உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
ரோஹித் தனது மைத்துனரின் மனைவியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக அவரது உறவினர் ஒருவர் எங்களிடம் கூறினார்.
அந்த சம்பவம் தொடர்பாக ரோஹித் தன்னை திட்டிய தந்தையின் காதை அறுத்து காயப்படுத்தினார் என்பதும் தெரிய வந்தது," என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
ரோஹித் போதைக்கு அடிமையானவர். குடி போதையில் பல நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என அருேகே உள்ள விவசாய தொழிலாளர்கள் தெரிவித்தனர். சில நேரங்களில் பண தகராறு கூட நடந்ததுண்டு.
ரோஹித் பண்ணையில் உள்ள ஆழ்துறைக் கிணற்றில் வழக்கமாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை குளிப்பார். அதற்கு மேல் இருக்க மாட்டார்.
ஆனால் கொலை நடந்த நாளில், குளிர் அதிகமாக இருந்தது. அந்த குளிரிலும் ரோஹித் ஒரு மணி நேரம் வரை கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளார்.
பொதுவாக விறகு வெட்ட வரும் பெண்கள் அந்த கிணற்றுப் பகுதியில்தான் துணி துவைப்பர். கொலை நடந்த நாளிலும் அந்த பெண்கள் துணி துவைப்பதை மக்கள் பார்த்துள்ளனர்.
அதே நாளில் ரோஹித்தின் வேட்டியில் ரத்தக்கறை இருந்ததாக ஒரு பண்ணை தொழிலாளி போலீஸிடம் கூறவே, அது பற்றி அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், அவர், காரி ஆற்றில் முயல்களை வேட்டையாடும்போது ஏற்பட்ட கறை அது என கூறி சமாளித்தார்.
இருப்பினும், அவர் சொன்ன இடத்தில் முயல் கொல்லப்பட்டதற்கான தடயம் இல்லை.
அதனால் ரோஹித் மீது சந்தேகம் வலுத்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், முதல்கட்ட விசாரணையில் ரோஹித் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து ரோஹித் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான தகவல்களும் தெரிய வந்தன.
அதன் விவரம்:
"நான் பல பெண்களை மிரட்டி உடலுறவு வைத்துள்ளேன். ஒரு பெண் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவளை விறகு வெட்ட அனுமதிக்க மாட்டேன்" என்று ரோஹித் கூறினார்.
மேலும், “நான் எனது மைத்துனரின் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயன்றேன். அவர் மறுத்ததால் அவரை தாக்கினேன். இந்த செயலுக்காக என் மீது பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய தினம் என் தந்தை என்னைத் திட்டியதால் அவருடைய காதை அறுத்தேன்."
"ஒருமுறை கீதா பென்னை உடலுறவு கொள்ள அழைத்தேன். ஆனால், அவர் அது பற்றி கிராம மக்களிடம் புகார் சொன்னார்.
அதனால் நான் கோபமடைந்து அவரை பயமுறுத்த முயன்றேன். இதனால் அங்கிருந்து அவர் பயந்து ஓடிவிடுவார் என நினைத்தேன். ஆனால், என் எதிரிலேயே சவால் விடும் வகையில் இருந்ததால் அவரை கொன்றேன்."
அப்போது மங்கிபென் கீதா நான் தாக்குவதைப் பார்த்து விட்டார். அதனால் அவரையும் கொன்றேன்.
இரண்டு வாரங்களாக நான் பிடிபடவில்லை. கிராமத்தில் போலீஸ் திரிவதால் நான் சௌராஷ்டிராவுக்கு ஓட விரும்பினேன். எனது 15 நாள் சம்பளம் கிடைத்ததும் ஓடி விடலாம் என நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பே பிடிபட்டேன்," என்று ரோஹித் போலீஸிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
பெண்களை அவர்களின் விருப்பமின்றி கட்டாய உறவுக்கு அழைக்கும் இந்த போக்கு குறித்து பிரபல மனநல மருத்துவரான டாக்டர் ஜோதிக் பச்சேச்சிடம் பிபிசி பேசியது.
"அத்தகையவர்களின் மனநிலை என்ன விலை கொடுத்தாவது தங்கள் பாலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் வன்முறையில் ஈடுபடும் நிலைக்கும் அவர்கள் தூண்டப்படுவார்கள்.
பலவீனமானவர்களை அடக்கி ஆளுவார்கள். இதனால் அவர்களின் தைரியம் வெளிப்படுகிறது.
வறிய நிலை பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் போது, ஆண்களை விட பெண்களே அதிகமாக குற்றம்சாட்டப்படும் நிலை உள்ளது.
அதனால் அவர்கள் அமைதியாக இருந்து விடுவதால் இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது," என்று மருத்துவர் கூறினார்.
"குஜராத்தில் ஒரு சில கிராமங்களில், குறிப்பிட்ட சாதியினர் குற்றம் செய்தால் தவறு செய்தவருக்கு பஞ்சாயத்து அபராதம் விதிப்பது வழக்கம்.
எனவே அத்தகைய சம்பவங்களில் போலீசார் வழக்குகளை பதிவு செய்வதில்லை. அதனால் அவர்கள் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை," என்றும் மருத்துவர் ஜோதிக் பச்சேச் கூறுகிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!