news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாலியல் சுதந்திரம் தரும் நிர்வாண விடுதி கொரோனா மையமாக மாறியது - பிரான்சில் சோகம்

04 Sep, 2020
கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாசப் போக்கிடமாகும். இயற்கையுடன் ஒன்றி இன்பத்தை அனுபவிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது இது அதிகளவில் கொரோனா பரவும் இடமாக மாறி வருகிறது. இப்பகுதிகளில் எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை அமைத்திருக்கிறார்கள். அங்கு வரும் சுமார் 800 பேரில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!