உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட வட இந்தியப் பெண் ஒருவர், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணைக் காப்பாற்றி, கடந்த திங்கள்கிழமை அன்று (ஜூன் 1) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டு பகுதி அருகே, திங்களன்று கொரோனா தடுப்பு ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறைளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் வட இந்தியப் பெண் ஒருவர் ரத்த காயங்களோடு சாலையில் கிடப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத்தினரிடம் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை மீட்ட மாதர் சங்கத்தினர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.வட இந்தியப் பெண் கூறுவது என்ன?
நடந்த சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி பிபிசி தமிழின் நடராஜன் சுந்தரிடம், "அவர் உடல் முழுவதும் காயங்களும், உடையில் ரத்தமும் இருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாததால், இந்தி தெரிந்தவர்களைக் கொண்டு அந்த பெண்ணிடம் விசாரித்தோம். அப்போது, அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்த்தவர் என்றும், அவரது குடும்பத்தினர் அனைவரும் பெங்களூரில் இருப்பதாகவும் கூறினார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காகத் தஞ்சாவூர் அழைத்து வரப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தார்," என்றார்.
பாலியல் வல்லுறவு வழக்கு என்ன நிலையில் உள்ளது?
பாதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாகத் தஞ்சாவூர் வல்லம் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்த மேலதிகத் தகவல்களுக்காக காவல் துறையினரை அணுகியது பிபிசி தமிழ். "பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்த்த இளம் பெண் கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக எனது மூத்த சகோதரி தஞ்சாவூர் அழைத்து வந்ததாக கூறுகிறார். ஆனால், நான் வேலைக்கு வந்த வீட்டில், வீட்டு வேலை கொடுக்காமல், என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். இந்த வீட்டிலிருந்த செந்தில்குமார் (வயது 47) மற்றும் ராஜம் என்ற பெண் இருவரும் சேர்ந்து என்னைத் தொடர்ந்து அடித்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்தனர். இதனிடையே, பெங்களூரில் இருந்த எனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இருப்பதால், அவரை பார்க்கச் செல்லவேண்டும் என்று அவர்களிடம் கேட்டிருந்தேன். ஆனால், வீட்டிலிருந்த செந்தில்குமார், ராஜம் மற்றும் அவருடன் இருந்த மேலும் இருவர் என்னை அடித்து கொடுமை செய்து என்னிடமிருந்த தொலைபேசியை பறித்துக் கொண்டனர். அதையடுத்து என்னை காரில் ஏற்றிவந்து சாலையில் விட்டுச் சென்றனர்," என்று பாதிக்கப்பட்ட வட இந்தியப் பெண் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!