இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அந்த வீட்டிற்கு வெளியே பழைய சவப் பெட்டிகள் கிடக்கிறது. அதே போல, இதனை தயாரிக்கும் பட்டறை ஒன்றும் அருகே இருப்பதால், அங்கே சவப் பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் வாழ்ந்து வந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இங்குள்ள புகைப்படங்களை நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு கட்டிடம் முழுவதும் பச்சை பசேல் என மறைந்து போய் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், ஏராளமான சவப் பெட்டிகள் வீட்டுக்கு வெளியே கிடக்கும் நிலையில், அதில் பலவும் திறந்து கிடப்பதும் தெரிய வந்துள்ளது.
சவப் பெட்டிகள் தவிர, பழைய தொப்பி, தூசி படிந்த குழந்தையின் தொட்டில், 60, 70 களில் வெளிவந்த நாளிதழ்கள், சில ஆவணங்கள் உள்ளிட்ட விஷயங்களும் இருந்துள்ளது.
மேலும் துருப்பிடித்த டிரக், வொர்க் ஷாப் உள்ளிட்டவையும் அப்பகுதியில் இருந்துள்ளது. இது போக வீட்டிற்குள் உடைந்து கிடைக்கும் பர்னிச்சர்கள், பழைய படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளது.
இந்த வீட்டில் யாருமே சரியாக வசிக்கவில்லை என்பது தெரிந்தாலும், சமீபத்தில் அத்துமீறி அங்கே சிலர் நுழைந்து முகாமிட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்த இடத்தின் தற்போதைய உரிமையாளர் இதனை முழுவதுமாக இடித்து, புனரமைக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
உலகில் பல இடங்களில், இது போன்ற பாழடைந்த வீடுகள் இருந்தாலும், இந்த வீட்டிற்கு வெளியே சவப் பெட்டிகள் உள்ளிட்ட மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான், பலரையும் மிரள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!