ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
அன்புவின் நண்பர்கள் பிராங்ஸ்டர் ராகுல், ஃபைனலி பாரத், டான்ஸ் மாஸ்டர் சதீஷ். பலரின் நிலங்களைப் பறித்து தன் கைக்குள் போட்டுக்கொள்ளும் குரூர கொடூர வில்லன் பூபதி ப்ரேம்ஜி அமரன் . என்ன எல்லாமே காமெடியாக இருக்கிறதே , யார் தான் சீரியஸாக இருப்பார்கள் என கேமராவை இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பினால் தேவனகோட்டையின் DROவாக சுப்பு பஞ்சு.
ஊர்ல ஒரு பிரச்சினை என்றால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தானே அதைத் தீர்த்து வைக்கமுடியும். அவராவது சீரியஸாக இருப்பாரா என்றால் அதுவும் ஆனந்த்ராஜ்.
இப்படி திரும்பும் பக்கமெல்லாம் மறந்து கூட சீரியஸான நபர்கள் இல்லாமல் காமெடி நடிகர்களை வைத்தே பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால், இத்தனை நடிகர்கள் இருந்தும், காமெடி படத்துக்கு சிவாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை. அவர் இல்லாத காட்சிகளின் காமெடி.. திணறல்.
தமன் இசையில் பாடல்கள் ஆடியோவிலேயே மொரட்டு ஹிட். ஜெஸ்ஸிக்கா ஜெஸ்ஸிக்காவும், பிம்பிளிக்கா பிலாப்பியும் திரையிலும் அவ்வளவு கலர்ஃபுல்லாய் இருக்கின்றன.
ஷோபி, அனிருத், விவேக் என கூட்டணி போட்டு செய்ததில் டான்ஸ், லைட்டிங், கலர்ஸ், ஜாலி லிரிக்ஸ் என எல்லாமே பக்காவாய் அமைந்திருக்கிறது.
அனுதீப்பின் முந்தைய படமான ஜதி ரத்னலாவும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்கும் brainless காமெடி வகைதான் என்றாலும், இதில் சில விஷயங்கள் செட் ஆகவில்லை.
சில ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கின்றன. சில சோதிக்க வைக்கின்றன. முன்பெல்லாம் பாடல்களுக்குத்தான் எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கின்றது என்று தோன்றும். பிரின்ஸிலோ காமெடி வசனங்களே ஏற்கெனவே கேட்டதுபோல இருக்கின்றன.
அதையே நக்கல் அடிக்கும் தொனியில் ஆனந்த்ராஜ் சொல்லும் வசனம் செம்ம. சத்யராஜுக்கு கனவு காட்சிகள் எல்லாம் டூமச் ப்ரோ. 'கும்முரு டப்புரு'மாதிரிலாம் எழுதறானுக என்று சிவாவிடமே சத்யராஜ் கோவப்படுவது
பாட்டில் கார்ட், known unknown, தேசம்- ஹ்யுமானிட்டி, கும்முரு டப்புரு - அலமத்தி அபிபோ என்று பல விஷயங்கள் சட் சட்டென்று கவர்கின்றன.
ஆனாலும் பாதி ஆடியன்ஸ் 'இன்னொருக்கா பார்த்தா சிரிக்கலாம்' நிலையிலேயே அமர்ந்திருப்பதால் பாஸ்போர்ட் வாங்கிவிட்டாலும் விசாவுக்கு வெய்ட்டிங்கில் இருக்கிறான் இந்த ப்ரின்ஸ்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!