ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
பார்வையாளர்களிலிருந்தும் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ப்ரொமோவில், "உங்களில் இருந்தும் சிலர் விளையாட வராங்க… வரவேற்க தயாராகுங்க" என்கிறார் கமல்ஹாசன்.காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! 👑 #BiggBossTamil6 - அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/ULgfT5J0XW
— Vijay Television (@vijaytelevision) September 27, 2022
பிரபலங்களும் பார்வையாளர்களின் பிரதிநிதிகளாக செல்பவர்களும் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துப்போகின்றனர் அல்லது அவர்களுக்குள் போட்டி எப்படி இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இணையத்தில் போட்டியாளர்கள் குறித்த ஊகங்கள் தவிர்த்து பிக்பாஸ் சீசன் 6 வீடு குறித்த புகைப்படங்களும் உலா வருகின்றன. எல்லா சீசன்களை போலவே இந்த சீசனிலும் நீச்சல் குளம், ஜெயில் போன்றவை இருக்கலாம். தினமும் இரவு 9.30 மணிக்கு ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் மட்டும் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும். இதுதவிர, 24 மணிநேரமும் பிக் பாஸ் நேரலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். மீண்டும் கமல்ஹாசன் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த பின், ஏற்கெனவே பிக் பாஸின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற நிகழ்ச்சியும் இடையே நடத்தப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவந்த நிலையில், 'விக்ரம்' இறுதிகட்ட படப்பிடிப்பின் காரணமாக அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் - 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இன்னும் மூன்றே நாட்களில்.. #3DaysToGo for the #GrandLaunch of #BiggBossTamil6 - வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia #VijayTelevision pic.twitter.com/YNLGa13WOT
— Vijay Television (@vijaytelevision) October 6, 2022
'விக்ரம்' திரைப்பட வெற்றி, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பின்னணிக் குரல் இவை இரண்டுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அரசியல் ரீதியாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக, தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குதல், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற குண்டுவீச்சு சம்பவங்களை சுட்டிக்காட்டி கலவரத்தைத் தூண்டுவோரை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அறிக்கைகள் வாயிலாக விடுத்து வருகிறார் கமல்ஹாசன்.
தவிர, சமீபத்தில் வெற்றிமாறன் 'ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்தும் போக்கு' குறித்த கேள்வி ஒன்றுக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்திருந்த கமல்ஹாசன், "ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை" என தெரிவித்து அவருக்கு ஆதரவாக பேசினார்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!