news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

04 Sep, 2024
"தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். "சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. 7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.இந்நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!