news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

09 Jan, 2025
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (9) காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 16,000 பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள் 5, கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். 4 முறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!