news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரபாகரனும்,பொட்டம்மனும் சரணடைய விரும்பவில்லை- எரிக் சோல்ஹெய்ம் தகவல்

31 Oct, 2015

விடுதலைப் புலிகளின் தலைமை மீது எரிக் சொல்ஹெய்ம் பாரிய குற்றச்சாட்டு. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு  விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான  நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் கடந்த 28-ம் தேதி நடந்த "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, அமெரிக்கா, நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வாயிலாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்கு வலியுறுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சரணடையும் விடுதலைப் புலிகளை ஏற்றி வருவதற்கு ஒரு கப்பலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு முயற்சிகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. இதன் விளைவாகவே, முள்ளிவாய்காலில் நடந்த பேரழிவும், வெள்ளைக்கொடியுடன் சரணடைய முனைந்தபோது, மரணங்கள் ஏற்பட்டன" என்று தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!