சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
மயன், குவாத்தலூப், குயன் ஆகிய மாவட்டங்களில் இவ்வகையான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதில் வெற்றி கிட்டியது. ஊரடங்கு உத்தரவு 8 மாநகரங்களிலும் பரிஸ் – பரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் அமுல்படுத்தப்படுகிறது.
தற்பொழுது நான்கு வாரங்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 6 வாரங்களுக்கு நீடிக்கப்படுவது நல்லதாக அமையும். அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானித்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகள் வழங்கப்படும்.ஹோட்டல் பணியாளர்கள்,உணவகப் பணியாளர்கள், கலை நிகழ்ச்சி அமைப்பாளர்கள், கலாச்சார பணியாளர்கள் ஆகியோருக்கு முழுமையான சோமாஸ் வழங்கப்படும்.
எல்லோரும் தொழில் புரிய வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும். இவற்றைத் தொடர வேண்டும்.
இதுவே வாழ்க்கைத் தரத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கும். இரவு 9 மணிக்குப் பின்னர் கடமை முடிந்து செல்பவர்களுக்கும் வைத்தியமனைகளுக்குச் செல்பவர்களுக்கும் அனுமதி உண்டு.
கட்டுப்பாடுகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. எதற்கும் தடையில்லை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இரவு 9 மணிக்குப் பின்னர் களியாட்டங்களில் ஈடுபடல்,உணவகங்கள் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது என்பவை தடை செய்யப்பட்டுள்ளன.
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறும் ஒருவருக்கு 135 யூரோ தண்டம் அறவிடப்படும். இரண்டாவது முறை அவர் அதே தவறைப்புரிந்தால் தண்டப்பணமாக ஆயிரத்து ஐநூறு ரூபா அறவிடப்படும். ஊரடங்கு உத்தரவை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்கான கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் ஒழுங்காக நடைபெறும். மாகாணத்திலிருந்து மாகாணத்திற்கு செல்வதில் தடை இல்லை.
விடுமுறைக் காலங்களிலும் இந்த நேரம் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து எப்பொழுதும் வெளியே செல்லல் வேண்டும்.
6 பேருக்கு மேல் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலும் வெளி இடங்களிலும் ஆறு பேருக்கு மேல் கூட முடியாது.
இணையதளம் வழியாக பணியாற்றக்கூடியவர்கள் அவ்வாறு பணி செய்ய வேண்டும். ஸ்ரொப் கோவிட் திட்டம் வெற்றி அளிக்கவில்லை. ஒக்ரோபர் 22ஆம் திகதி தூஸ் அன்ரி கோவிட் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஆர் எஸ் ஆ 150 யூரோவும், குழந்தைகளுக்கு 100 யூரோவும் வழங்கப்படும். ஒற்றுமையாக இருந்தால் கொரோனாவை வெற்றி கொள்ளலாம்” என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!