பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர்: கிடைத்த ஏமாற்றம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலிந்தர் சிங் (34) என்பவர், பிரித்தானியாவுக்கு (United Kingdom) செல்ல வேண்டும் என்ற கனவுடன் முயற்சி மேற்கொண்ட நிலையில், மோசடிக்காரரால் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலிந்தர் சிங்கை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக உறுதியளித்த கௌரவ் என்ற நபர், அவரிடமிருந்து ரூபாய் 2.4 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 15ஆம் திகதி பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய தேவையான விமான டிக்கெட்கள் மற்றும் அமெரிக்க டொலர்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், விமான நிலையத்திற்கு சென்று பயணிக்க தயாரானபோது தான், கௌரவ் வழங்கிய விமான டிக்கெட்களும் அமெரிக்க டொலர்களும் போலியானவை என்பது பலிந்தர் சிங்கிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னை திட்டமிட்டு ஏமாற்றியதாகக் கூறி உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர் கௌரவ் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயணம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!