உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான்
05 Nov, 2026
வீட்டில் எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய சிறுவனை வாழ்த்த, நண்பர்கள், உறவினர்கள் யாரும் வராதாதால் கவலை அடைந்துள்ளான். இதனைக் கவனித்த அவனது தந்தை, காவல்துறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ரோந்து வாகனங்களில் சிறுவனின் வீட்டுக்கு அணிவகுத்து வந்தனர். வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்திய அவர்கள், சிறுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சைரன்களை ஒலித்தும், ஹேப்பி பர்த்டே பாடலைப் பாடியும் சிறுவனை மகிழ்வித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து, ‘அமெரிக்க காவல்துறையினரின் அற்புதமான செயலைப் பாருங்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.What a good gesture. In USA, a father called Police and told it was his son's Birthday and no one came due to Covid-19. See the amazing response from Police! pic.twitter.com/CFmsD9TNVJ
— Riteish Deshmukh (@Riteishd) April 17, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!