பிளஸ்-2 தேர்வில் மகள் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் துரையரசன். கார் புரோக்கர். இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 34). நேற்று வீட்டில் இருந்த ரேணுகாதேவி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரேணுகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
இறந்த ரேணுகாதேவியின் மகள் அமிர்தவள்ளி, பிளஸ்-2 முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில், பெற்றோர் எதிர்பார்த்ததைவிட அவர் குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது.
மதிப்பெண் குறைவாக பெற்றதால், எதிர்பார்த்த படிப்பில் அவரை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குடும்பத்தில் பணப்பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரேணுகாதேவி தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!