news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிள்ளைகளுக்கும் திருமணமாகாததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

24 May, 2025
தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி (வயது 63) என்ற தந்தையே உயிரிழந்துள்ளார். பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று (23) வீட்டில் தூக்கி தொங்கி உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!