news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புங்குடுதீவில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்!!

03 Oct, 2020
புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பலொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊர்தீவுச் சிவன் கோயில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!