Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்குக் கூட ஜனாதிபதியினால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. கொரோனா தொற்று எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரும் அதே நிலை நீடிக்கப் போகிறது. அதற்காக சர்வதேச உறவுகளை சீரமைத்துக் கொள்ளாமல், இருக்க முடியாது.
ஏனென்றால் இலங்கைக்கு பொருளாதார மீட்சி முக்கியமாகத் தேவைப்படுகிறது. மற்றெல்லாப் பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் கூட, பொருளாதார மீட்சி அவசியமானதாக இருக்கிறது,
இலங்கையின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது.
இதனை நிமிர்த்த வேண்டுமானால், அரசாங்கத்துக்கு கடன்களை விட, புதிய முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் அவசியம்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் புதிய முதலீடுகள், திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகளில் சர்வதேச சமூகத்துடன் எந்தளவுக்கு நெருங்கிச் செயற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாடு விடயத்தில் இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது, அந்த உடன்பாட்டை தொடர்வதா இல்லையா என்று அறிவிக்க அரசாங்கம் தயங்குகிறது.
அது ஏற்புடையது அல்ல, அதனால் நாட்டுக்கு இழப்பு என்றால், அதனை உடனடியாக அறிவித்து விட்டுப் போயிருக்கலாம்.
அதனையும் செய்யாமல், உடன்படவும் முடியாமல் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
இந்தச் சர்ச்சைக்கு ஏதோ ஒரு விதத்தில் முடிவு எட்டப்பட வேண்டும். அது நடந்தால் தான், அமெரிக்காவுடனான உறவுகளை சீர்படுத்துவதற்கான வழிமுறையை கண்டறிய முடியும்.
இதற்கிடையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அங்கு ஜனநாயக கட்சி அரசாங்கம் அமைந்தால், இலங்கை அரசாங்கத்தினால், எந்தளவுக்கு நெருங்கிச் செயற்பட முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.
ஏனென்றால், ஜனநாயக கட்சி நிர்வாகம் தான் இலங்கை தொடர்பான பிரேரணைகளை ஐ.நா மனி உரிமைகள் பேரவையில் கொண்டு வந்தது.
அந்தப் பிரேரணைகளை நிறைவேற்றவதாக வாக்குறுதிகளைக் கொடுத்த இலங்கை அரசாங்கம் அதனை நீர்த்துப் போகச் செய்து, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய மூன்று விடயங்களையும் இப்போது கானல் நீராக மாற்றி விட்டிருக்கிறது,
இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி வரும் நிலையில், அமெரிக்காவில் ஜனநாயக் கட்சி ஆட்சி மலருமானால் தற்போதைய அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி தோன்றக் கூடும்.
எனவே புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்காவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்வது என்பது உடனடிச் சாத்தியமான விடயமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையும் இது தான்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை முன்வைப்பதற்கு ஒத்துழைத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கையில் அமைதி, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்காக, முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் மீதான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாமை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சினத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா விடயத்திலும் இலங்கை அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லை. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவின் பொறுமையை அதிகபட்சமாக சோதித்து வருகிறது இலங்கை அரசு.
கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுமையாக இந்தியாவுக்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி, பின்னர் பாதியில் பாதியாக குறைக்கப்பட்டது. இப்போது எதுவும் இல்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
ஏற்கனவே மத்தல விமான நிலைய விடயத்தில், இந்தியா ஏமாற்றம் அடைந்தது, கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்திலும் அதே நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டால் புதுடெல்லியை வெறுப்படையச் செய்யும்.
இலங்கையின் நிதி நிலையை கொழும்பில் இலகு ரயில் திட்டத்துக்கு வழங்கவிருந்த நிதியை ஜப்பான் நிறுத்தியிருக்கிறது.
இவையெல்லாம் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் விளைவுகள்.
இந்த நிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும். மாற்றியமைப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்.
ஏனென்றால் வெளிநாட்டு நிதி முதலீடுகள், உதவிகள் என்பன இப்போது முக்கியமானவை.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான கொடுப்பனவை செலுத்தக் கூட திராணியற்ற அரசாக மாறியிருக்கிறது இலங்கை.
இந்த நிலையை சரிப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்துடனான நெருங்கிய ஊடாட்டம் அவசியம்.
அதனை தற்போதைய அரசாங்கத்தினால் எந்தளவுக்கு விரைவாகவும், உறுதியாகவும் முன்னெடுக்க முடியும் என்பது கேள்வியே.
ஏனென்றால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சர்வதேச அளவில் உள்ள நண்பர்களை விட, நண்பரல்லாதவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!