news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புதுக்குடியிருப்பில் சடலம் ஒன்று மீட்பு

13 Apr, 2023
  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளத்தில் இன்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். குளத்தின் கரையில் இவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சாரம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹேரத் குளத்தில் இறங்கி சடலத்தினை மீட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!