news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புதுக்குடியிருப்பில் 13வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

23 Nov, 2023
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் சனிக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (21) முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் வைத்து குறிப்பிட்ட சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முலத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இளைஞனை மூலத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது டிசம்பர் 5ஆம் திகதிவரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!