news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புத்தளம் விபத்தில்; முன்னாள் எம்.பி விஜயகலா படுகாயம்

29 Jun, 2023
புத்தளத்தில் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!