`உங்கள் மனைவியிடம் ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அவருக்குப் புனித நீர் கொடுத்தால் எவ்விதப் பிரச்னைகளாக இருந்தாலும் தீர்ந்துவிடும்' என்று, நண்பனின் மனைவியைத் தனி அறையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் மதபோதகர் ஒருவர்.
ஒரு கட்டத்தில் அவருடைய டார்ச்சர் தாங்கமுடியாமல் அந்தப் பெண், திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிப்பவர் முகமது ஃபாரூக். இவர் மதபோதகராக இருந்து வருகிறார்.
கே.கே நகரைச் சேர்ந்த பர்வீன் என்ற பெண், முகமது அஸ்லாம் என்பவரைக் காதலித்து 2008 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், முகமது பாரூக், அஸ்லாம் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனைத் தொடர்ந்து அஸ்லாம், மத போதகரான முகமது ஃபாரூக்தான் என் வாழ்க்கையில் எல்லாம் என்று அவரது மனைவி பர்வீனிடம் சொல்லியிருக்கிறார்.
இந்த நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது ஃபாரூக் பர்வினுக்குப் புனிதநீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அவரிடமிருந்து 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளார். இதற்கு முகமது ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து பர்வீன் திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது ஃபாரூக் மற்றும் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!