அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?
20 Oct, 2026
மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள்.
இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள்.
நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு
அந்த ஒற்றைக் கண் மனிதன் காரெக்டர் முழுக்க கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. படம் முழுக்க அத்தனை பாத்திரங்களும், அந்த கிராபிக்ஸ் கரும்புலி உள்பட ஆ என வாயைப் பிளந்து பல்லைக் காட்டியபடியே இருக்கிறார்கள்.
அல்லது தாவித் தாவி பறக்கிறார்கள். வேதாளங்களின் சக்தியாம் இதெல்லாம்! அதியுச்ச கற்பனைக் கதை என்று கூறி விஜய்யிடம் கால்ஷீட் வாங்கியவர்கள், அவரை வித்தியாசமாக தோன்ற, நடிக்க வைத்திருக்க வேண்டாமா?
எல்லோரும் சடாமுடியுடன் இருக்க, விஜய்க்கு மட்டும் பக்காவாக சம்மர் கட்டிங். இப்படியெல்லாம் யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், இது லாஜிக்கே இல்லாத கற்பனை உலகம் என்று சொல்லிவிட்டார்கள் போலும்!
சித்திரக் குள்ளர்கள், பேசும் பறவைகள், பெரும் அரக்கர்கள், மந்திர சக்தி படைத்த ஸ்ரீதேவி என சுவாரஸ்யப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், அவை ஜஸ்ட் லைக் தட் கடந்து போகின்றன. மிகப் பிரமாதமான ஆட்டத்துடன் அறிமுகமாகிறார் விஜய்.
மருதீரனாகவும் புலிவேந்தனாகவும் அவர் தன் பங்கை முழுமையாகச் செய்திருந்தாலும், அவரை இன்னும் சிறப்பாகக் காட்டியிருக்கலாம் இயக்குநர்.
ஆனால் புலிவேந்தனாக வரும் விஜய் பாத்திரம், தன் மக்களுக்காக விஷம் குடித்து சாகும் தருணத்தில் நடிப்பு அபாரம்.
அவரது உதடுகள் கூட நடித்துள்ளன. ஸ்ருதியுடன் ரொமான்ஸ், ஹன்சிகாவுடன் கற்பனையில் ரொமான்ஸ் என அதில் குறை வைக்கவில்லை.
ஆனால் அவரது வசன உச்சரிப்பில் ரொம்பவே செயற்கைத்தனம். படம் முழுக்க தடுமாறித் தடுமாறி அவரைப் பேச வைத்திருப்பது என்ன மாதிரி ஸ்டைல் என்பதை சிம்பு தேவன்தான் விளக்க வேண்டும். இரண்டு நாயகிகளுக்கும் பெரிய வேலையில்லை.
சுதீப்பை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். எப்போது பார்த்தாலும் அந்த உயரமான நாற்காலில் கோணலாக சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார். அரை பாடலுக்கு நடனமாடி, இரண்டு சண்டைகள் போட்டு செத்துப் போகிறார்.
தம்பி ராமய்யாவுக்கு பச்சைத் தவளையை நக்கி வழி கேட்கும் பாத்திரம். பெரிதாக சிரிப்பு வரவில்லை. சத்யனும் அப்படியே.
ஆனால் ஒரு காட்சியில் குபீரென சிரிப்பு கிளம்பும்.. படம் முழுக்க விஜய்யுடன் வரும் பேசும் பறவை பாவ விமோசனம் பெற்று எழும்.. அது கருணாஸாம்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!