'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
படக்குறிப்பு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
காவல் ஆணையர் மற்றும் அனைவரிடமும் பேசியுள்ளேன். நான் சற்று நேரம் கழித்து மருத்துவமனைக்குச் செல்வேன். இப்போதைக்கு நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை." என்றார்.
மேலும், "மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்." என்றார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.
நேற்று ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருடங்களில் முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
படக்குறிப்பு, பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்
அதைத் தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் முன்னே அமர்ந்திருக்க, பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியின் வீரர்களை கௌரவிக்க விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி
மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்
சம்பவ இடத்தில் இருந்து பேசிய ஆர்சிபி ரசிகை ஒருவர், "உள்ளே இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன, அதனால்தான் எங்களை உள்ளே விடவில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
வாயில்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன, காவல்துறை வாயில்களைத் திறந்தாலும், மக்கள் உள்ளே வரத் தொடங்குவார்கள். ஏற்கனவே நிறைய பேர் காயமடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான காணொளிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!