திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இதற்கிடையில், இவரது உடல் உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த உடன் பெற்றோர்கள் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் காமாட்சி தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்தவர்களில் பலர் சின்னசாமி மைதானத்தின் வாயில் எண் 7க்கு அருகில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
''அதன்பின் நடந்ததை அவள் நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. நாங்கள் சென்றடைய இன்று அதிகாலை 3:00 மணியாகிவிட்டது.
காலை 5 மணிக்கெல்லாம் பிரேத பரிசோதனை முடித்துக் கொடுத்து விட்டார்கள். பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்போதுதான் (காலை 10:00 மணி) உடலை எடுத்துக் கொண்டு சேலம் வந்து கொண்டு இருக்கிறோம்.
ஸ்டேடியத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில்தான் எனது மகள் இறந்ததாக உடனிருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எங்களால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.'' என்றார்.
ஆர் சி பி அணியினர் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ பி எல் கோப்பையை வென்றதை அடுத்து, அவர்களுக்கான வெற்றிக் கொண்டாட்டங்கள் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி அணியினருக்கான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவை காண ரசிகர்கள் பலரும், வெற்றிக் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்க பலரும் கூடியிருந்தனர். இரண்டு லட்சம் பேர் எதிர்பாராத வகையில் கூடிவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கூராய்வு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஜூன் 4-ம் தேதி இரவு ஒப்படைக்கப்பட்டு விட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்த சிலர் 'பௌரிங் அண்ட் லேடி கர்சன்' மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல்
திவ்யான்ஷி, பெங்களூரு
அக்ஷதா பய் (26), உத்தர் கன்னடா
பூமிக் (19), பெங்களூரு
சஹானா (23), கோலார்
சின்மயா ஷெட்டி (19), பெங்களூரு
மனோஜ் குமார் (20), தும்கூர்
ஸ்ரவணா (20), சிக்கபல்லபூர்
ஷிவா (எ) ஷிவலிங்க ( 17), யதகிரி
பூர்ண சந்திரா (20), மாண்டியா
காமாக்ஷி தேவி (29), தமிழ்நாடு
ப்ரஜ்வல் (22), பெங்களூரு
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!