இசையமைப்பாளர் தேவா காலமானார் - 400க்கும் மேலான படங்களில் பங்காற்றிய 'தேனிசைத் தென்றல்
17 Oct, 2026
சித்தார்த் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறி ‘பெங்களூர் டேஸ்' ரீமேக் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா மீண்டும் அதே படத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்களான 36 வயதினிலே, பாபநாசம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மலையாளத்தில் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்' தமிழில் ரீமேக் ஆகிறது.
நஸ்ரியா, துல்கர் சல்மான், பகத் பாசில் மற்றும் நிவின் பவுலி என்று ஸ்டார் நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் ஹிட் அடித்தது.
ஆர்யா-ஸ்ரீதிவ்யாதமிழில் நஸ்ரியா கதாப்பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் ராணா, ஆர்யா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் படமாக்கப்பட்டுவருகிறது. நட்சத்திர படங்களே களமிறங்கும் இந்தப்படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!