news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பல பெண்களை ஏமாற்றினேன்....துரத்தும் துரோகம்

05 May, 2016
''உடல்ரீதியான உணர்வுகளுக்காக மட்டுமே அவளை காதலிப்பது போல் போலி முகமூடி தரித்திருந்தேன். ஆசை, மோகம் என்பவற்றுக்கு மத்தியில் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி அந்த அப்பாவிப் பெண் நம்பும் படி நடந்துகொண்டேன். இறுதியில் என் எண்ணம் ஈடேறியவுடன் அவளை கை கழுவினேன்

"பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரி­யாது. பணம் இல்­லா­விட்டால் உன்னை யாருக்கும் தெரி­யாது என்­பார்கள்" அதை என் வாழ்க்கை அனு­ப­வங்­களின் மூலம் நான் அறிந்­து­கொண்டேன்.

கைநி­றைய பணம் இருந்த போது தலை கால் புரி­யா­த­வாறு ஆண­வத்­துடன் நடந்­து­கொண்டேன்.  அப்­போது என்னை சுற்றி ஒரு நண்­பர் கூட்டம் இருந்­து­கொண்டே தான் இருக்கும். ஆனால், நான் இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளிலும், சூதாட்ட நிலை­யங்­க­ளிலும் என் பணம் முழு­வ­தையும் இழந்த போது என்­னுடன் யாரும் இருக்­க­வில்லை. தனி­ம­ரமாய் ஒரு­வேளை சாப்­பாட்­டுக்கே கையேந்தும் நிலைக்குத் தள்­ளப்­பட்டேன். இறு­தியில் என் வயிற்­றுப்­பி­ழைப்­புக்­காக செய்­யக்­கூ­டாத எல்லா தொழில்­க­ளையும் செய்தேன். “

இது சிறைச்­சாலை கம்­பி­களின் பின்னால் சதா தனது தவறை எண்ணி வருந்­திக்­கொண்­டி­ருக்கும் சுமித்தின் வேத­னையின் வெளிப்பாடாகும்.

சுமித் பிறப்பின் போதே தாயால் அவ­மா­னத்­துக்­கு­ரி­யவன் என்ற முத்­தி­ரை­யி­டப்­பட்டு தூக்­கி­யெ­றிப்­பட்­டவன். அதன்பின் இரண்­டரை வயது  பூர்த்­தி­யாகும் வரை சிறுவர்   இல்­ல­மொன்றே சுமித்தை அர­வ­ணைத்து வளர்த்­தெ­டுத்­தது.

இத­னி­டையே, பல வரு­டங்­க­ளாக குழந்­தை­க­ளுக்­காக தவம் இருந்த பணக்­கார தம்­ப­தி­க­ளான, தரிந்­துவும், பத்­மி­னியும் குழந்தையொன்றை தத்­தெ­டுப்­பற்­காக சுமித் இருந்த சிறுவர் இல்­லத்தை நோக்கி வந்த போது, சுமித்தின் மழலை மொழி­க­ளையும், குறும்புச் செயல்­க­ளையும் பார்த்து தங்­களை மறந்து போனார்கள்.

இறு­தியில், தங்­க­ளு­டைய குழந்­தை­யாக சுமித்தை குறித்த சிறுவர் இல்­லத்­தி­லி­ருந்து சட்­ட­பூர்­வ­மாக தத்­தெ­டுத்­துக்­கொண்­டார்கள்.

அதன்பின், அவர்­க­ளு­டைய உழைப்பில் உரு­வான சொத்­து­க­ளுக்கும், பரம்­பரை பரம்­ப­ரை­யாக இருந்து வந்த ஆஸ்­தி­க­ளுக்கும் சுமித்தே ஒரே வாரி­சா­க­வி­ருந்தான்.

பல காலம் குழந்தை இல்­லாமல் இருந்­த­மையால் சுமித் மீது தமது ஒட்­டு­மொத்த அன்­பையும் பொழிந்­தார்கள்.

ஊரார் அனை­வ­ருமே இவர்­களின் சொந்தப் பிள்­ளை­யா­கவே சுமித்தை பார்த்­தார்கள். சுமித்தின் எதிர்­கால கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தரிந்து  ஒவ்­வொரு  மாதமும்  பெரும் தொகை­யான பணத்தை சுமித்தின் வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட்டார்.

தரிந்து அந்த ஊரில் மிகப்­பெ­ரிய பணக்­காரர் என்­பதால் அன்­றாடம் அவர்­க­ளு­டைய வீட்டில் களி­யாட்­டங்­க­ளுக்கும், விருந்துபசாரங்களுக்கும் பஞ்­ச­மி­ருக்­க­வில்லை.

சுமித்தும் சிறு­வ­ய­தி­லி­ருந்தே அவற்­றுக்கு பழ­கிக்­கொண்டான். இது­ இவ்­வா­றிக்க சுமித்­துக்கு 10 வயதாய் இருக்கும் போது சுமித்தின் குழப்­ப­டித்­தனத்தைப் பொறுக்­க ­மு­டி­யாமல் வீட்டில் வேலைக்­கி­ருந்த வேலைக்­காரி "நீ யாருக்கு பிறந்­த­வனோ ? உன்னை தத்தெடுத்ததால்  தான்   நீ இப்­படி குழப்­படி பண்­ணு­கின்றாய்” என்று திட்­டி­விட்டாள்.

உடனே, அவன் ஓடிச்­சென்று தனது பெற்றோர் என எண்­ணி­யி­ருந்த தரிந்­து­வி­டமும் பத்­மி­னி­யிடம் கேட்க அவர்­களும் அவ­னிடம் தொடர்ந்து  உண்­மையை மறைக்க முடி­யாமல் எல்லா உண்­மை­களையும் கக்­கி­னார்கள்.

எனவே, அன்று தொடக்கம் தன்னைப் பெற்ற பெற்­றோரை வெறுக்கத் தொடக்­கினான். அந்த வெறுப்பு அவ­னு­டைய வாழ்­வையே திசை மாற்­றி­யது.

இது தொடர்­பாக சுமித் மனம் திறந்து பேசு­கையில்,

“ நான் அவர்­க­ளு­டைய பிள்ளை இல்லை என்­பதை அறிந்த நாள் முதல் என்னை பெற்­றெ­டுத்த தாயையும், தந்­தை­யையும் அடி­யோடு வெறுக்க ஆரம்­பித்தேன்.

எனினும், என்னை வளர்த்­தெ­டுத்த பெற்­றோர்கள் என்னை அவர்­களின் பிள்­ளையைப் போலவே பார்த்­தார்கள்.

எந்த நிகழ்­வுக்கு சென்­றாலும் என்னை அழைத்­துச்­செல்­வார்கள். எனினும், யார் என் அருகில் இருந்­தாலும் என்­னு­டைய உலகம் தனிமை­யையே விரும்­பி­யது.

குடும்­பத்­த­வர்கள் யாரு­டனும் எனது நேரத்தை கழிக்க விரும்­ப­வில்லை. பாட­சா­லை­யிலும் அதிக கோபக்­கா­ர­னா­கவே நடந்­து­கொண்டேன்.

பல­முறை அதிபர், ஆசி­ரி­யர்­களும்   என்­னு­டைய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக  அப்­பாவை வரச்­சொல்லி கண்­டித்­தார்கள். எனினும் அவற்­றுக்­காக அப்பா என்னை ஒரு­நாளும் திட்­டி­ய­தில்லை.

என்­னிடம் பண வச­திகள் இருந்­த­ப­டியால் எப்­போ­துமே என்னைச் சுற்றி ஒரு நண்பர் கூட்டம் இருந்­து­கொண்டே இருக்கும்.

எனினும், அம்­மா­வுக்கும் அப்­பா­வுக்கும் நான் பல பட்­டங்கள் பெற்று அவர்­க­ளு­டைய கம்­ப­னியின் தலைமை பொறுப்­பி­லி­ருந்து நிர்­வ­கிக்­க­வேண்டும் என்­பதே கன­வா­க­வி­ருந்­தது.

எனினும், நான் அவர்­க­ளு­டைய கனவை நிறை­வேற்றத் தவ­றினேன்.

கல்வி பொதுத் தர­ாதர சாதா­ரண பரீட்சை எழு­திய கையோடு என் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தேன்.

அதன்பின் இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளி­லேயே என்­னு­டைய பெரும்­பா­லான பொழுதை கழித்தேன்.

அதில் நண்­பர்­க­ளுடன் சேர்ந்து பெரும் பணத்­தையும் செல­வ­ழித்தேன். =எனினும், அதற்­காக அப்பா என்னை ஒரு­போதும் திட்டியதில்லை.

குடித்து உடம்பை கெடுத்­துக்­கொள்­ளாதே என்று மட்டும் அடிக்­கடி கூறுவார். அந்த அள­வுக்கு அவ­ருக்கு என் மேல் பாச­மி­ருந்­தது.

ஒருநாள் அப்பா என்னை அவ­ரு­டைய தொழிற்­சா­லைக்கு அழைத்துச்­சென்று அங்கு எனக்கு சில பொறுப்­பு­களை ஒப்­ப­டைத்தார்.

ஆரம்­பத்தில் அது எனக்கு பெரும் தலை­யி­டி­யா­க­வி­ருந்­தது.

எனினும், சில காலம் அங்கு வேலை செய்­து­கொண்­டி­ருக்கும் போது  பிரி­யங்கா என்ற அழ­கிய பெண்­பிள்­ளையின் அறி­முகம் கிடைத்­தது.

அவளின் வசீ­க­ர­மான பேச்­சிலும், அழ­கிலும் வெகு­வாக கவ­ரப்­பட்ட நான், அவ­ளுடன் நெருங்கிப் பழக ஆரம்­பித்தேன்.

இரு­வரும் காதல் என்ற மதில் சுவர்­க­ளை­யெல்லாம் தாண்டி உணர்­வு­க­ளுக்கும் இடம் கொடுத்தோம்.

எனினும், அவளை திரு­மணம் செய்­து­கொள்ளும் எண்ணம் என்­னிடம் இருக்­க­வில்லை. களி­யாட்ட விடுதி, சினிமா என்று உல்­லா­ச­மாக பொழுதைக் கழித்தேன். எனினும், வெகு­நாட்கள் செல்லும் முன்­னரே அப்­பா­வுக்கு இந்த விடயம் தெரி­ய­வர, என்னை அவர்­க­ளுக்கு சொந்­த­மான தேயிலை தோட்­டத்­துக்கு அனுப்பி வைத்தார். நானும் எந்­த­வித மறுப்பும் தெரி­விக்­காமல் அங்கு புறப்­பட்டுச் சென்றேன். எனினும், நான் பொழு­து­போக்­குக்­காக காத­லித்­த­மையால் என் காத­லியின் பிரிவு எனக்கு பெரிய விட­ய­மாக தெரி­ய­வில்லை. அவளை அத்­துடன் கை கழு­வினேன்.

அங்கு நான் தங்­கு­வ­தற்கு பங்­கள­ா வொன்றும் இருந்­தது. எனக்கு சமைத்­துக்­கொ­டுத்து, வீட்­டு­வே­லை­களை எல்லாம் செய்து வைப்­ப­தற்கு கமலா என்ற வய­தான பெண்­ணொ­ரு­வரும் பங்­க­ளா­வுக்கு வந்து போவார்.

எனவே, அங்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்லை. நான் சற்று பொறுப்­புடன் நடந்­து­கொண்டேன். அப்பா எப்­போ­தா­வது என்னை வந்து பார்த்­து­விட்டு போவார். அம்மா தினமும் தொலை­பே­சியில் கதைப்பார். இவ்­வாறு இயற்­கையின் இத­மான தென்­ற­லுடன் என் நாட்­களும் அங்கு நகர்ந்­தன.

இத­னி­டையே, கம­லாவின் கடைசி மகள் அடிக்கடி எங்கள் பங்­க­ளா­வுக்கு வந்­து­போனாள். அவள் பார்ப்­ப­தற்கு அழ­கான 18 வயது பருவப் பெண். எப்­ப­டி­யா­வது அவளை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்­றி­யது.

நான் அவளை பின்­தொ­டர்ந்து சென்று கதைக்க முற்­பட்டேன். நாள­டைவில் அவளும் என்­னோடு கதைக்க ஆரம்­பித்தாள். அது­மட்டுமின்றி, கமலா வேலைக்கு வரும் போது அவளும் சில சம­யங்­களில் பங்­க­ளா­வுக்கு வருவாள்.

இவ்­வாறு காலச் சக்­கரம் விரை­வாக நகர ஆரம்­பிக்க, நாங்கள் இரு­வரும் காதல் வானிலும் சிற­க­டித்து பறக்க ஆரம்­பித்தோம்.

அவள் என்னை உண்­மை­யாக காத­லித்தாள். எனினும், நான் உடல்­ரீ­தி­யான உணர்­வு­க­ளுக்­காக மட்­டுமே அவளை காத­லிப்­பது போல் போலி முக­மூடி தரித்­தி­ருந்தேன். அவளை அடைய வேண்டும் என்ற ஆசை, மோகம் என்­ப­வற்­றுக்கு மத்­தியில் போலி வாக்­கு­று­தி­களை அள்ளி வீசினேன். அதை அந்த அப்­பாவிப் பெண்ணும் நம்பி என்­னுடன் நெருங்கிப் பழக ஆரம்­பித்தாள்.

ஒருநாள் கமலா பக்­கத்து ஊரி­லுள்ள உற­வினர் வீட்­டுக்கு சென்­றி­ருக்க, நான் என் எண்­ணத்தை ஈடேற்­றிக்­கொண்டேன். அதன்பின் சில காலம் எங்­க­ளு­டைய உறவு இவ்­வாறு நீடித்­தது. எனினும், கம­லா­வுக்கு இந்த விடயம் .தெரி­ய­வர, ஒரு நாள்

என்­னிடம் வந்து, " ஐயா நாங்கள் ஏழைகள் .எங்­க­ளுக்கும் உங்­க­ளுக்கும் சரி­வ­ராது. என் மகள் ஒரு அப்­பாவி. அவ­ளுக்கு உலகம் தெரி­யாது. தயவுசெய்து அவளை விட்டு விடுங்கள்” என்று கெஞ்­சினாள்.

எனினும், அப்­போது எங்­க­ளுக்குள் எல்லாம் நிறை­வ­டைந்­தி­ருந்­தி­ருந்­தது. அது­மட்­டு­மின்றி, தோட்­டத்தில் வேலை செய்யும் யாரோ எங்க­ளு­டைய அப்­பா­விடம் எனக்கும், கம­லாவின் மக­ளுக்குமிடையில் இருந்து வந்த உறவு முறை­பற்றி கூற, அப்­பாவும் அம்­மாவும் யாருக்கும் சொல்­லாமல் வெளி­நாட்­டுக்கு பய­ண­மா­னார்கள்.

அவர்கள் போகும் போது இருந்த வீடு, காணி எல்­லா­வற்­றையும் என்­னு­டைய பெயரில் எழுதி வைத்­த­துடன், என்­னு­டைய வங்கி கணக்­கிலும் பெரும் தொகை­யான பணத்­தையும் வைப்­பி­லிட்­டி­ருந்­தார்கள்.

அதன்பின் நான் தேயிலை தோட்­டத்­தி­லி­ருந்து மீண்டும் தலை­ந­க­ருக்கு வந்தேன். அப்­போது எனக்கு கம­லாவின் மகள் குறித்து சிறிதும் கவ­லை­யி­ருக்­க­வில்லை. அந்த உற­வுக்கும் முற்­றுப்­புள்ளி வைத்தேன்.

அதன்பின் , இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளில் நண்­பர்­க­ளுடன் உல்­லா­ச­மா­க­வி­ருந்தேன். கசினோ, குதிரை பந்­தயம் என்­ப­வற்றில் பெரும்­பா­லான பணத்­தை­யிட்டேன் அவற்றில் பெரும் பணத்­தையும் இழந்தேன்.

இறு­தியில் என் சொத்­துக்கள் அனைத்­தையும் விற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது அது­மட்­டு­மின்றி,. வங்­கியில் அப்பா வைப்­பி­லிட்­டி­ருந்த பணம் முழு­வ­துமாய் செல­வ­ழித்தேன். அம்­மாவும் அப்­பாவும் ஆசையாய் வாங்­கித்­தந்த காரையும் விற்றேன்.

இவ்­வாறு ஊதா­ரியாய் பணம் முழு­வ­துமாய் இழந்­த­வுடன் தான் பணத்தின் அருமை எனக்கு புரிந்­தது.

வீட்­டையும் விற்று இறு­தியில் நடு வீதிக்கு வந்தேன். அப்­போது எனக்கு உத­விக்­கென்று யாரும் இருக்­க­வில்லை. பணம் இருக்கும் போது பக்­கத்­தி­லி­ருந்த நண்­பர்கள் அனை­வரும் பணம் கையில் இல்­லை­யென்று தெரிந்­த­வுடன் என்னை விட்டு வில­கிச் ­சென்­றனர். நான் தனித்­து­வி­டப்­பட்டேன்.

நான் வயிற்­று­ப்பி­ழைப்­புக்காக பல­ரிடம் சென்று கையேந்­தினேன். எனினும், யாருமே என்னைக் கண்­டு­கொள்­ள­வில்லை. எல்­லோரும் என்னை ஏள­னமாய் பார்த்­தார்­களே தவிர யாரும் உதவ முன்­வ­ர­வில்லை.

இறு­தியில் எப்­ப­டி­யா­வது மீண்டும் பணம் சம்­பா­திக்க வேண்டும் என்ற யோச­னையில் தான் இன்­னு­மொ­ரு­வ­ரிடம் இணைந்து மிகப்­பெரிய திருட்டு வேலை­களில் ஈடு­பட தொடங்­கினேன். அதன்­மூலம் நிறைய பணம் சம்­பா­தித்தேன்.

இறு­தியில் ஒருநாள் பொலி­ஸாரின் சுற்­றி­வ­ளைப்பின் போது நானும் எனது நண்­பரும் கையும் கள­வு­மாக மாட்­டிக்­கொண்டோம்.

எங்­களை பொலிஸார் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நீதி­மன்றம் எனக்கு இரண்டு வரு­ட­கால சிறை­தண்­டனை விதித்­தது.

அதன்பின் இரண்டு வரு­டங்கள் சிறையில் தண்­டனையை நிறை­வு­செய்­து­விட்டு வெளி­யேறிய தரு­வாயில் எனக்­கெ­தி­ராக கமலா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தாள்.

18 வயது பெண்­ணொ­ரு­வரை ஏமாற்றி பாலி­யல்­ துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் எனக்கு மீண்டும் சிறை­தண்டனை உறு­தி­யா­னது.

அத­ன­டிப்­ப­டையில் தான் இன்று வரை சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றேன். சிறையில் தனி­மையில் இருக்கும் போது தான், என்னை தத்­தெ­டுத்து, சொந்தப் பிள்­ளையைப் போல் வளர்ந்த பெற்­றோரின் அருமை எனக்குப் புரிந்­தது.

நான் அவர்கள் சொல்­வதை கேட்டு நன்­றாக படித்து நல்ல முறையில் இருந்­தி­ருந்தால், இன்று நான் எங்கேயோ எப்­ப­டி­யெல்­லாமோ சுக­போக வாழ்க்கை வாழ்ந்­தி­ருப்பேன்.

நான் அவர்­க­ளுக்கு செய்­தது மிகப்­பெ­ரிய துரோகம். குழந்­தை­களே இல்லாதிருந்த அவர்கள் எவ்வளவு ஆசையுடன் என்னை தத்தெடுத்திருப்பார்கள். நான் அவர்களின் நம்பிக்கையனைத்தையும் வீணடித்துவிட்டேன்.

அதுமட்டுமல்ல, நான் காதலித்து ஏமாற்றிய பெண்பிள்ளைகள் என்னால் எத்தனை நாள் அழுதிருப்பார்கள். அதுவும் கமலாவின் மகளுக்கு இன்று ஒரு குழந்தையும் இருக்கின்றது.

இவற்றையெல்லாம் எண்ணும்போது எனக்கு என்னை நினைத்தே அருவருப்பாகவிருக்கின்றது. இவ்வாறு சுமித் தனது தவறை எண்ணி வருந்தினான்.

சுமித் இன்னும் ஒரு சில மாதங்களில் விடுதலையாகி விடுவான். அதன்பின் கமலாவின் மகளை தேடி கண்டுபிடித்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு தன்னுடைய குழந்தைக்கு நல்லதொரு தந்தையாய் வாழும் எதிர்பார்ப்பிலேயே தனது விடுதலை நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான்.

-வசந்த அருள்ரட்ணம்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!