வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
25 Oct, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக தௌபால் மாவட்டத்தில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முதல் கைது புதன்கிழமையன்றும் இரண்டாவது கைது வியாழக்கிழமையன்றும் நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார். புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட நபர்தான் இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் இந்தத் தகவலை வழங்கிய அடுத்த சில மணிநேரங்களில், இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடியோவில் கூட்டத்தை வழிநடத்துவதாகக் காணப்படும் நபரான ஹூய்ரேம் ஹெரதேஷ் சிங் முதலில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மற்ற மூன்ற பேரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக இன்று காலை இதுகுறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!