news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெண் எம்.பி.க்கு பாலியல் சீண்டல்; இங்கிலாந்து பிரதமரின் மூத்த ஆலோசகர் ராஜினாமா

17 Sep, 2025
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசு, துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னரின் வரி விவகாரம், அமெரிக்க தூதர் லார்டு பீட்டர் மாண்டெல்சனின் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, தொழிற்கட்சியின் இளநிலை பத்திரிகை அதிகாரியாக இருந்த பால் ஓவென்டன், சக ஊழியர்களுடன் உரையாடியபோது, மூத்த பெண் எம்.பி.யான டயான் அப்போட் குறித்து பாலியல் ரீதியாகவும், இழிவாகவும் சில செய்திகளை அனுப்பியுள்ளார். இந்த செய்திகள் தற்போது வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பிரதமரின் மூத்த ஆலோசகராகவும், வியூக இயக்குநராகவும் பணியாற்றி வந்த பால் ஓவென்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!