news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெண் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்

05 Sep, 2024
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (04) மாலை கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண், அந்த தங்கும் அறையில் ஆண் ஒருவருடன் வசித்து வருவதுடன், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் கொலைக்கு பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!