இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
பிரான்ஸையும் உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 16 வார வழக்கில், டரியன் மற்றும் அவர் தந்தைக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதங்கள், மிகவும் உணர்ச்சி பூர்வமான தருணங்களாக இருந்தன.
விசாரணையின் போது "நான் உன்னை தொட்டதில்லை, எப்போதுமில்லை," என டொமினிக் பெலிகாட் தனது மகளிடம் கெஞ்சினார், "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!" என டரியன் கூச்சலிட்டார்.
தம் தாயின் வழக்குப் போல் அல்லாமல், தன்மீது நிகழ்த்தப்பட்டதாக அவர் நம்பும் வன்கொடுமைக்கு ஆதாரம் இல்லாததால், அந்த வழக்கில் "மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவராக" உணர்வதாக டரியன் முன்னர் தெரிவித்திருந்தார்.
இவ்வாரத்தில் முன்னதாக தனது தந்தை மீது தாம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் "ஒரு குறியீடு", ஆனால் "நான் ராசயன வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவள், ஆனால் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படவில்லை." என்று ஆரம்பம் முதலே தாம் முன் வைத்துவரும் குற்றச்சாட்டை ஒட்டியே இருப்பதாக எல்லே பிரான்ஸ் இதழிடம் அவர் கூறினார்.
தம் சார்பில் வாதிட வழக்கறிஞர் ஃபிளாரன்ஸ் ரால்ட்டை அவர் நியமித்துள்ளார்.
1990-களில் வன்முறையான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக ரால்ட் பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருப்பவர். அவர்களில் ஒருவர் மேரியான் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இளம் சொத்து முகவர். இவர் 1999-ல் நிகழ்ந்த ஒரு பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்டவர். இந்த குற்றச்சாட்டை டொமினிக் பெலிகாட் ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்றொருவரும் தனது 20-களில் இருந்த ஒரு எஸ்டேட் முகவர். அவர் 1991-ல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக டொமினிக் பெலிகாட் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு இதில் தொடர்பில்லை என அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.
தனக்கும் மேரியனுக்கு ஒற்றுமைகள் இருப்பதாக டரியன் கூறினார். "நாங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறோம். அவருக்கும் பொன்னிற கேசம். பாப் கட் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம்... அவருடைய வழக்கறிஞரை சந்தித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிய விரும்பினேன்," என எல்லே பிரான்ஸிடம் கூறினார் டரியன் காவல்துறையிடம் வழக்கறிஞர் ரால்ட் அளித்த புகாரில், டரியனை பெண் மருத்துவரின் சோதனைக்குட்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் டொமினிக் பெலிகாட் தன் மனைவி மீது பயன்படுத்திய போதை மருந்துகளுக்கு இவரும் உட்படுத்தப்பட்டாரா என சோதிக்கப்படவுமில்லை என்றும் கூறியிருந்தார். இந்தப் புகார் பிரான்ஸ் ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டது. நடந்து முடிந்த வழக்கு கிசெல் பெலிகாட் மீது மட்டும் கவனம் செலுத்தியதாகவும், தனது கட்சிக்காரர் விளிம்பு நிலையில் பாதிக்கப்பட்டவராகவே நடத்தப்பட்டதாக ரால்ட் தெரிவித்தார். ஒரு புதிய தீவிரமான விரிவான விசாரணையை நடத்தவேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். டிசம்பரில் டொமினிக் பெலிகாட்டுடன் 49 நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைவர் மீதும் குறைந்தது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அது கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக பதினேழு பேர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் ஏழு பேர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். மேல்முறையீட்டை தொடருவது என முடிவு செய்பவர்கள் இந்த வருட இறுதியில் தெற்கு பிரான்ஸில் உள்ளா நைம்ஸில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார்கள், 2024 செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை நீடித்த முதல் வழக்கு, கிசெல் பெலிகாட் தனது அநாமதேய உரிமையை விட்டுக்கொடுத்து வழக்கு விசாரணையை பொதுமக்களும் ஊடகங்களும் பார்க்க அனுமதித்ததால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடுவழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!