news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பைக்கின் பின்புறம் மனைவியின் கால்களை கட்டி இழுத்துச்சென்ற கொடூர கணவன் - வீடியோ

13 Aug, 2024
"ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது மனைவியின் கால்களை கட்டி ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.தனது சகோதரியை பார்க்க வேண்டும் இழுத்து செல்லப்பட்ட பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார். இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை கட்டி இழுத்து சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!