தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
ஆனால், அதனை பொங்கல் வைத்து ஒரு விழாவாகக் கொண்டாடும் பழக்கம் பிற்காலத்தில் வந்ததாக இருக்க வேண்டும் என்கிறார் வையாபுரிப்பிள்ளை. "இங்கனமாக சங்க காலம் தொட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது தை மாதப் பிறப்பு. இதில் பொங்கலிட்டு உத்தராயணப் புதுமை கொண்டாடும் வழக்கம், பிற்காலத்தில் தோன்றியதாக இருக்க வேண்டும்" என்கிறார் அவர். ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனும் சங்கப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் தற்போது கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் கொண்டாடப்பட்டது குறித்த பதிவுகள் கிடையாது என்கிறார். நன்றி தெரிவிக்கும் நாள் வேளாண்பெருங்குடி மக்கள் பயிர் செய்ததை அறுவடை செய்யும் காலகட்டமான தை மாதத்தின் முதல்நாளில் தங்கள் வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும். ``இன்றைக்கு தேங்க்ஸ் கிவ்விங் டே என்று மேற்கத்திய நாடுகளில் நடத்துகிறார்களே அது போன்ற ஒரு நிகழ்வுதான் பொங்கலும். அன்றைக்கு இருந்த பிரதான தொழில் உழவுதான். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் விதைப்புக்கு என்றால் தை மாதம் அறுவடைக்குரியது. அறுவடை வெற்றிக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வுதான் பொங்கல். அறுவடை வெற்றிக்கு பிரதான காரணம் சூரியனும் மாடும். அதற்காக இவை இரண்டுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன். வீட்டில் தேவையற்றதாக கருதும் பொருட்கள் மார்கழி இறுதிநாளான போகி தினத்தன்று தீயிலோ அல்லது நீரிலோ தூக்கியெறிப்படும். தேவையற்றதாக கருதும் பொருட்களை நம் வீட்டில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் போக்குவதுதான் போகிப் பண்டிகையின் நோக்கம். பழைய கழிதலும் புதியன புகுதலும் என்பதோடு புத்தொளியுடன் தொடங்கும் பொங்கல் திருநாளில் மேல்த்தோல் நீக்காத பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும். மறுநாள் உழவுக்கு உதவிய மாட்டினை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். மேற்கண்ட மூன்று தினங்கள் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தாலும், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அரிதாகிவருவதாகக் கூறுகிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.பொங்கல் என்பது அறுவடை நாளாகவே கொண்டாடப்பட்டதாகச் சொல்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான வானமாமலை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குறித்து திருஞானசம்பர் பாடிய திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பொங்கல் குறித்து வருகிறது. "மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் / கைப் பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்/ நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் /தைப்பூசும் காணாதே போதியோ பூம்பாவாய்" என்கிறது அந்தப் பாடல். அதாவது, கபாலீச்சரம் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.புறநானூறு காலத்திலிருந்தே பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது
ஆனால், மாட்டுப் பொங்கல் என்ற ஆய்வு நூலை எழுதிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் நாட்டுப்புற ஆய்வறிஞருமான ஆறு. ராமநாதன், தற்போது கொண்டாடப்படுவதைப் போல பழங்காலத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகக் குறைவு என்கிறார். "தற்போது கொண்டாடப்படுவது போன்ற பொங்கல் சங்க காலத்திலோ அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலோ கொண்டாடப்பட்டதற்கான வலுவான சான்றுகள் ஏதும் கிடையாது. தை நீராடல் என வரும் குறிப்புகள் எல்லாம் வலிந்து பொங்கல் பண்டிகையோடு இணைக்கப்படுகின்றன" என்கிறார் அவர். இருந்தாலும், பொங்கல் பண்டிகை வேறு எந்த பண்டிகைகளையும்விட தனித்துவம் மிக்கது என்கிறார் பரமசிவன். "முதலாவதாக, இது ஒரு தேசிய இனத் திருவிழா. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுகள் கிடையாது. பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் வழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது" என தனது தமிழ்ப் புத்தாண்டு கட்டுரையில் குறிப்பிடுகிறார் தொ. பரமசிவன். பிபிசிபொங்கல் பண்டிகை வேறு எந்த பண்டிகைகளையும்விட தனித்துவம் மிக்கது என்கிறார் பரமசிவன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!