இஸ்ரேலின் அடுத்த பிரதமர் நெதன்யாஹுவா, ஐசென்கொட்டா?
25 Nov, 2026
இதற்கென 1.06 பில்லியன் முதல் 1.33 பில்லியன் டொலர்கள் செலவினம் ஏற்பட்டதாக இஸ்ரேலியப் படைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மணி நேரத் தாக்குதலை முறியடிக்க இவ்வளவு பெருந்தொகை செலவிடப்பட்டமை கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விடயமே. அதேவேளை, தாக்குதலுக்காக ஈரான் இந்தத் தொகையில் பத்தில் ஒரு சதவீதத்தைக் கூடச் செலவழித்து இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி உண்டு எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்குமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் 32 நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கற்ஸ் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்யுமாறும் உலக நாடுகளை இஸ்ரேல் கோரியுள்ளது.
இஸ்ரேலின் பதில் தாக்குதல் அறிவிப்புத் தொடர்பில் பதிலளித்துள்ள ஈரான், இஸ்ரேலியத் தரப்பில் இருந்து ஈரான் மீதோ, ஈரானிய இலக்குகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி தர தாம் முன்னரைப் போல 12 நாட்கள் காத்திருக்கப் போவதில்லை எனவும் நொடிக் கணக்கில் பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அந்தத் தாக்குதலில் எதிர்பார்த்திராத ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
உண்மையிலேயே ஈரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதல் நிகழுமா? அவ்வாறு நிகழ்ந்தால் அது எத்தகைய தாக்குதலாக அமையும். பதிலடியாக ஈரான் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் எவ்வாறு அமையும். அவ்வாறு பதில் தாக்குதல் நிகழ்ந்தால் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடிப் போர் மூளுமா? என்றவாறான கேள்விகள் பொது வெளியில் எழுப்பப்பட்டு வருகின்றன.
[caption id="attachment_258758" align="alignnone" width="2560"]
Des militants palestiniens du Hamas[/caption]
தற்போது பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறிப்பிட்ட இலக்கை இன்னமும் எய்தவில்லை என்பது தெரிந்ததே. ஹமாஸ் இயக்கத்தை முற்றாக அழிப்பது, பணயக் கைதிகளாக உள்ள அனைவரையும் சிறை மீட்பது என்ற இலக்குகளுடேனேயே இஸ்ரேலியப் படைகள் களம் இறங்கின. ஆறு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் இஸ்ரேல் தனது இலக்கில் இன்னமும் முழுமையாக வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் ஈரானை வலிந்து போருக்கு அழைத்து, அதன் விளைவாக அமெரிக்கா போரில் இணையும் என்பதே இஸ்ரேலின் எதிர்பார்ப்பு.
ஆனால், ஈரான் மிகுந்த நிதானத்துடன் தனது தாக்குதலை நடத்தி இஸ்ரேலின் எண்ணத்தில் மண்ணைத் தூவி உள்ளது. ஈரானின் நிதானமான நடவடிக்கை காரணமாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் ஈரான் மீதான கண்டனங்களுடன் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.
ஆனால், யுத்த வெறி கொண்ட இஸ்ரேலிய அரசாங்கம் எதனையும் இலகுவில் விட்டுவிடுவதில்லை. ஈரானுக்கு எதிராகப் பதிலடி உண்டு என்று அறிவித்த பின்னர், எதுவும் செய்யாமல் இருந்துவிட்டால் அது வெட்கக்கேடான விடயமாகவே பார்க்கப்படும். அது உள்நாட்டிலும் அரசாங்கத்துக்குச் சிக்கல்களை உருவாக்கலாம்.
ஏற்கனவே காஸாவில் போர் நடைபெறும் முறைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ச்சியாக தனது அதிருப்தியை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது, ஈரானுக்கு எதிரான பதிலடி தொடர்பிலும் பொறுமை காக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் ஆலோசனைகளைச் செவிமடுக்காமல் காஸாவில் அராஜகம் புரிவதைப் போல, ஈரான் விடயத்திலும் இஸ்ரேல் செயற்படுமானால் மத்திய கிழக்கில் மற்றொரு போரை யாராலும் தடுத்துவிட முடியாமல் போகும் என்பதே கசப்பான உண்மை.
சுவிசிலிருந்து சண் தவராஜா
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!