இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
கடந்த நான்கு நாட்களில் உலக அளவில் இந்தப் படத்தின் வசூல் 247 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் நிலையில், அடுத்து வரும் திங்கட்கிழமையன்று திரையரங்குகளில் பாதி இடங்களை நிரம்பும். ஆனால், அக்டோபர் 3ஆம் தேதி திங்கட்கிழமையன்று பொன்னியின் செல்வன் ஓடிய திரையரங்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீத இடங்கள் நிறைந்தன. திங்கட்கிழமை மட்டும் 16 - 17 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்தியிலும் இந்தப் படத்தின் வசூல் பத்து கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது. இதுதவிர, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, இதற்கு முன்பாக 2.0, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனையைப் படைத்திருக்கின்றன. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டும் சுமார் 140 கோடியாக இருந்தது. இதில் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 80 கோடி ரூபாய் பங்கு கிடைத்தது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தைப் பொருத்தவரை, இதுவரை தமிழ்நாட்டில் எந்தத் திரைப்படமும் வசூலிக்காத அளவுக்கு சுமார் 170 கோடி ரூபாயை வசூலித்தது. உலகம் முழுவதிலும் வைத்துப் பார்க்கும்போது பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வசூலைப் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டு வசூலைப் பொறுத்தவரை, விக்ரம் திரைப்படமே இப்போதுவரை முதலிடத்தில் இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்தச் சாதனையை முறியடிக்குமா என்பதை அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும். இது தவிர, இந்தப் படத்தின் ஓடிடி உரிமைகள் அமெசான் பிரைம் வீடியோவிற்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. சுமார் 125 கோடி ரூபாய்க்கு இந்த உரிமை விற்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.#PonniyinSelvan crosses magic ₹100 Cr gross in theatrical collections in TN! Congrats #ManiRatnam @MadrasTalkies_ @LycaProductions pic.twitter.com/oAxnwufEXx
— Sreedhar Pillai (@sri50) October 5, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!