பொலநறுவை பகுதியில் 17 வயது மாணவி கொலை – தாயின் இரண்டாவது கணவர் கைது முயற்சியில்
பொலநறுவை மெதிரிகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த கொலைக்கான முதற்கட்ட விசாரணைகள் படி, மாணவி தாயாரின் இரண்டாவது கணவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மாணவியின் பாட்டியும் காயமடைந்து மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!