news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொலிஸார் விரட்டிச் சென்று மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் மின்கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

11 May, 2024
யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!