போட்டோ எடுக்க நின்ற ரசிகருக்கு திடீரென முத்தம் கொடுத்த அமலா பால் - வீடியோ!
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவருக்கு அமலா பால் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தோஷத்தில் அமலா பால் ரசிகரின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதோ அந்த வீடியோ..
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!