news@ilakkiyainfo.com

பிரிவுகள்

போதையில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு சென்ற பொலிஸாருக்கு விளக்கமறியல்

04 Dec, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்திற்கு மதுபோதையில் சென்று நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!