news@ilakkiyainfo.com

பிரிவுகள்

போலியான வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்தவர் கைது!

11 Aug, 2023
போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் மற்றும் அவரது ஆவணங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!