'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
சமீபகாலமாக இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஜோடியே ஆட்டத்தை நிறைவு செய்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
காரணம், அந்த அளவுக்கு அவர்களுடைய ஆட்டம் இருந்தது. குறிப்பாக 8வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா துபா ஹாசன் ஓவரில் 5 பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டார்.
இதனால் விரைவிலேயே அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு பர்த்டே கிப்ஃட் (நேற்று பிறந்தாள்) தருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் உதவியுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார்.
அதுபோல் மற்றொரு முனையில் அவருக்கு இணையாக சரவெடி வெடித்த ஷபாலியும் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம்.
அடுத்துவந்த வீராங்கனைகள் வெற்றிக்கு வித்திடுவர் என நினைத்த நிலையில் ஹேமலதா, 11வது ஓவரில் நசரா சாந்து ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
என்றாலும் அவரும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுரும் (5 ரன்கள்), ஜெசிமா ரோட்ரிக்ஸும் (3 ரன்கள்) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 14.1 ஓவரில் 109 ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!