மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை துப்பாக்கியால் தன்னுயிரை மாய்தார்
தனது மகளைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்ட சம்பவமொன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை - பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தைச் சேர்ந்த நபரின் மனைவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்குக்கு வீட்டுப்பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே, தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தந்தை உட்படுத்தியுள்ளார்.
தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில், தாயின் கவனத்துக்கு மகள் கொண்டுவந்துள்ளார். எனினும், இதுதொடர்பில் வெளியே சொன்னால், இரண்டு பிள்ளைகளுடன் தானும் தன்னுயிரை மாய்த்துக்கொள்வேன் என மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.
எனினும், சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து, சந்தேநபரை கைது செய்வதற்கு அவருடைய வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். விடயத்தை அறிந்துகொண்ட சந்தேநபர், வீட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!