சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அதாவது ஆரியர்கள், திராவிடர்கள் [தமிழர்கள்], என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள்.
என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள்.
இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள், பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து 'Damela, Dameda, Dhamila and Damila' என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் 'மூத்த' ['elder'] இருப்பது கவனிக்கத் தக்கது.
எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன், விஜயனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டு வாச தேவனின் தாய் ஒரு தமிழிச்சி என தெரியவருகிறது.
அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டு அபயனின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள்.
மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன.
தொடரும்....
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!