மூன்று காரணங்கள்: சூயஸ் கால்வாயை மீட்பது, எகிப்து அதிபரை பணியவைப்பது, அரபு தேசங்களுக்கும் ஐரோப்பாவின் மீது நிரந்தரமான பயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. (நிலமெல்லாம் ரத்தம் - 67)
29 Oct, 2026
உதாரணமாக, பதின்மூன்றாவது அத்தியாயம் மகிந்த வருகையில் [CHAPTEE XIII / THE COMING OF MAHINDA ]: " இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும்.
அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் என்றான் .... நான்கு தேரர்களுடனும சுமணனுடனும், பாமர சீடனுமான பந்தூகனுடனும், மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர்களாக அந்த விகாரையிலிருந்து கிளம்பினர் [The great Indra sought out the excellent thera Mahinda and said to him: ' Set forth to convert Lanka ; by the Sambuddha also hast thou been foretold (for this) and we will be those who aid thee there .... with the four theras and Sumana, and the lay-disciple Bhanduka also, to the end that they might be known for human beings, rose up in the air (and departed) from that vihara] என்கிறது.
ஆகவே நாம் இங்கு தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும், தேவர்களையும், காற்றினூடாக பறந்து செல்வதையும், இன்னும் அது போன்ற பல மந்திர மாய வித்தைகளையும், உதாரணமாக தன்னை பின்பற்றுபவர்களை மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றுதல் போன்றவற்றையும் காண்கிறோம்.
இது கட்டாயம் இந்து புராணங்களையும், அங்கு இந்திரன், விஷ்ணுவின் விளையாடல்களையும் மற்றும் பல சம்பவங்களையும் நினைவூட்டுகிறது, உதாரணமாக, ராமாயணத்தில் அனுமான் இதே இலங்கைக்கு காற்றினூடாக பறந்து வந்ததையும், நெருப்பூட்டி பயமுறுத்தியதையும் காண்கிறோம்.
ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும்.
அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம்.
அதனால் தான் மகாவம்சத்தை முழுக்க முழுக்க அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றின் பிடியில் அகப்பட்டு, இன்று அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை, மீட்டு எடுப்பது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதை காண்கிறோம்.
வரலாற்றை வரலாற்றுக்காகவும் அறிவிற்காகவும் ஆய்வு செய்ய வேண்டும், அதைவிட்டு, தனக்கு சார்ப்பாக ஒரு தார்மீக அறிவுறுத்தலை மையமாகக் கொண்ட ஒரு வெளிப்புற நோக்கத்திற்காகவோ, அல்லது அதை திரித்தோ, பொய்யுரைகளை வலுக்கட்டாயமாக சேர்த்தோ, தனது அரசியலின் நோக்கத்திற்காக உருவாக்கக் கூடாது ["The study of history must be for history and knowledge sake. History should never be didactic, nor should it be falsified and made into tools of politics."] என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மகாவம்சத்தை எவரும் அணுகவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.
"புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி"
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்.
மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 10
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!