சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார்.
தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது.
அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது.
அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை போலும். ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka]
மகாவம்சம் என்றால் "பெருங்குடியினர்" என்பது பொருளாகும். இது விஜயனின் வருகையோடு தான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் பிடிவாதமாக உள்ளது.
அதனை மெய்ப்பிக்க தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னர், தேவர்களது அரசன் இந்திரனை அழைத்து விஜயன் கூட்டாளிகளோடு லங்காவில் [இலங்கையில்] கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார் என்கிறது.
என்றாலும் வெவேறு கப்பல்களில் ஏற்றப்பட்ட அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகளைப் பற்றி புத்தரும் அக்கறை எடுக்கவில்லை, மற்றும் விஜயனும் அவனது கூட்டாளிகளும் அக்கறை எடுக்கவில்லை ? அது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது ? ஏனென்றால் அவர்கள் நாடு கடத்தப்பட்டது, விஜயனும் கூட்டாளிகளும் செய்த பாவங்களாலேயே, மற்றும் படி அவர்கள் அப்பாவிகள், அப்படி என்றால் யாரை முதலில் அக்கறை செலுத்தவேண்டும். நீங்களே சொல்லுங்கள்?
மேலும் இலங்கைத் தீவுக்கு, புத்த பெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்கர் அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டவும், வட இலங்கையில், நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்கும் மூன்றாவதாக, கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னனின் வேண்டுதலை ஏற்றும் வருகை தந்ததாக கூறுகிறது. எனவே இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் என்பது தெளிவாகிறது.
இலங்கையை இயக்கர்குல மன்னனும், சிவ பக்தனுமான இராவணன் ஆண்டான் என, கி மு 5ஆம் நூறாண்டில் எழுதிய ராமாயணம் என்ற இதிகாச கதையும் கூறுகிறது. இது ஏறத்தாழ மகாவம்சத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது.
அதேவேளை வரலாற்று ரீதியாக புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் போனார் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும்.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் எப்படி காமினிக்கு புத்த மார்க்கத்தை நம்பாதவர்களை கொல்லலாம் என போதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது? இன்றும் இப்படியான மனப்போக்கை நாம் இன்னும் காண்கிறோம்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 08
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!