news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மக்கள் போராட்டத்தால் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி வழங்கிய ஆஸ்திரேலியா

28 May, 2022
ஆஸ்திரேலியாவின் அகதிகள் அடைக்கல கோரிக்கை குறித்த கொள்கைகள் மீதான கோபத்தை ஒருமுகப்படுத்திய, கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நடேஸ் முருகப்பன் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டு காலப் போராட்டம் வெற்றியடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு விசா வழங்கியது. அவர்கள் தற்காலிகமாக பில்லோவீலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் குடும்பம் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வருவோர் பெரும்பாலும் அவர்களுடைய குடும்பப் பெயரைக் கொண்டு அறியப்படுவார்கள். ஆனால், நடேஸ் முருகப்பன் குடும்பம் மட்டும் பில்லோவீலா குடும்பம் என அழைக்கப்படுகிறது. பில்லோவீலா என்பது ஆஸ்திரேலியாவில் அவர்கள் 4 ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தின் பெயர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!