இரகசிய-அறையில் வைத்து இரு பெண்கள் படுகொலை!!-ஓய்வுபெற்ற-கடற்படை-அதிகாரிகள்-மூவருக்கும்-விளக்கமறியல்
20 Oct, 2026
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 5ஆம் குறிச்சி பகுதியில் பிற்பகல் 4.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ வீரர், கடமையை முடித்துக் கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா? அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில், மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!