news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் ரயிலுடன் மோதி இளைஞன் பலி

26 Feb, 2024
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் வைத்து ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியவில் இடம்பெற்றுள்ளது . கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய அசோக்குமார் சனுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கருவப்பங்கேணி பகுதி தண்டவாளத்தில் வைத்து , மட்டக்களப்பில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த இன்டசிற்றி ரயிலுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது மேலும் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!