news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் வான் மோதியதில் சிறுவன் மரணம்

18 Aug, 2024
மட்டக்களப்பு, வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியைக் குறுக்கே கடந்த சிறுவன் மீது வான் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தப் பரிதாப சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!