சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
ஏறாவூர் மிச்நகர் பகுதியில் தொடருந்து கடவை வீதியை முச்சக்கரவண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், இதற்கான சரியான நடவடிக்கையை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது.
மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில் 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!