news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டு. சந்திவெளியில் விபத்து ; இரு இளைஞர்கள் பலி

26 Sep, 2023
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டர் சைக்கிள் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று திங்கட்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதோடு,  கனரக வாகன சாரதியை சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை சுங்கான்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ் மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய  வடிவேல் தர்மராஜ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில் போக்குவரத்து பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது, மோட்டர் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இருவரை பொலிஸார் நிறுத்துமாறு சைகை காட்டிய போது நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிச் சென்றுள்ளனர். இந்நிலையில்,  மோட்டர்சைக்கிள் வீதியில் எதிரே சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!