news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம் - வவுனியாவில் சம்பவம்

10 Nov, 2024
பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (9) மாலை வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது. வவுனியா ஈச்சங்குளத்தில் அம்மிவைத்தான் பகுதியில் வசித்த 58 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய நபர், அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!